R.Maheshwary / 2021 நவம்பர் 12 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸை செலுத்தாமல் 14,000 இருப்பதாக மாத்தளை மாவட்ட தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
இதற்கமைய, சினோபார்ம் இரண்டாவது தடுப்பூசியை செலுத்தாமல் 10,032 பேரும் மொடர்னா இரண்டாவது டோஸை செலுத்தாமல் 1,068 பேரும் எஸ்ட்ராசெனிகா இரண்டாவது டோஸை செலுத்தாமல் 3,020 பேரும் என மொத்தமாக 14,390 பேர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ளமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே, இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ளாதவர்கள், தத்தமது சுகாதார அதிகாரி அலுவலகங்களுக்குச் சென்று, இரண்டாவது டோஸை செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றார்.
19 minute ago
28 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
45 minute ago
2 hours ago