2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

15 வயது சிறுமி குழந்தை பிரசவிப்பு: சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மொஹொமட் ஆஸிக்

15 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அன்றே குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் கண்டி பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவரே இவ்விபரீத நிலையை எதிர்கொண்டுள்ளார்.

மேற்படி சிறுமியின் காதலன் என்று கூறப்படும் மைத்துனர் உறவு முறையான 22 வயது இளைஞன் இச்சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வயிற்றுவழிக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதே  இச்சிறுமி  7 மாத கர்ப்பிணி என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  இச்சிறுமி அன்றைய தினமே குழந்தை பிரசவித்துள்ளார். 

விசேட குழந்தை பராமரிப்பு பகுதியில் குழந்தை சிகிச்சை பெற்று வருவதுடன் அவரது காதலன் எனக் கூறப்படும் மைத்துனரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பிரதான நிதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது சந்தேக நபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்க மறியளில் வைககுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X