Freelancer / 2023 மார்ச் 18 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சிறுவன் ஒருவர் மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இணை செயலாளர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த 15 வயதுடைய சிறுவனின் பாட்டி அண்மையில் ஸ்ரீபாத மலைக்கு சென்று மீண்டும் சிறுவனின் வீட்டுக்கு வருகை தந்ததாகவும் தெரியவந்துள்ளதாக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனினும் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்படவில்லை எனவும்
மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். R
46 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
15 Jan 2026