Freelancer / 2023 ஜூன் 29 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.திவாகரன், டி.சந்ரு
நுவரெலியா - தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிலாரண்டன் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் எதிர் திசைக்கு சென்று எல்லைக் கல்லில் மோதுண்டு 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஐவரும் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.R
8 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago