2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

18 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Janu   / 2024 நவம்பர் 24 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை மீறும் வகையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட உணவகம், சில்லறைக் கடைகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதர்களாலேயே 18 கடை உரிமையாளர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொட்டகலை நகருக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதார பாதுகாப்புடனான உணவுகள் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தால் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது கொட்டகலை பிரதேச சபையிடம் வர்த்தக அனுமதி பத்திரம் பெறாமல், சுகாதாரமற்ற முறையில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை நடத்தி வந்த 18 உரிமையாளர்கள் கண்டறியப்பட்டதுடன், சுகாதார பாதுகாப்பற்ற பல உணவுப் பொருட்களும் இதன்போது  அழிக்கப்பட்டன.

 எஸ்.கணேசன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X