Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 02 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா, ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஹட்டன் காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் மீது, மரங்கள் விழும் அபாயம் காரணமாக இரண்டு நாட்களுக்கு, திங்கட்கிழமை (02), செவ்வாய்க்கிழமை (03) பாடசாலையை மூட முடிவு செய்துள்ளதாக பாடசாலையில் அதிபர் ஜேம்ஸ் விக்டர் தெரிவித்தார்.
ஒன்றாம் வகுப்பு முதல் 13வகுப்பு வரை சுமார் 358 மாணவர்கள் கல்வி கற்கும் இந்தப் பாடசாலையில் 40 பேர் கொண்ட ஆசிரியர் குழு உள்ளது.
பாடசாலைக்கு அருகில் இரண்டு பெரிய பெரிய மரங்கள் விழும் அபாயத்தில் உள்ளன என்றும், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்திற்கு இரண்டு மரங்களை வெட்டுமாறு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்காததாலும், கடந்த சில நாட்களாக நிலவிய பலத்த காற்று மற்றும் மோசமான வானிலை காரணமாகவும் மரத்தின் பல கிளைகள் பாடசாலை கட்டிடங்களின் மீது விழுந்தன என்றும் அதிபர் கூறினார்.
மத்திய மாகாண கல்வி அமைச்சு மற்றும் ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளரின் முறையான அனுமதியுடன், (02) மற்றும் (03) ஆகிய திகதிகளில் பாடசாலை மூடப்படும் என்றும், பாடசாலை கட்டிடங்களின் மீது இடிந்து விழும் அபாயத்தில் உள்ள இரண்டு பெரிய மரங்களும் (03) நாட்களில் அகற்றப்படும் என்றும் அதிபர் தெரிவித்தார்.
இந்நிலையில், பாடசாலை வளாகத்தில் உள்ள பல மரங்களை வெட்ட பெற்றோர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
34 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
46 minute ago
1 hours ago
1 hours ago