2026 மே 09, சனிக்கிழமை

dd

2 மாதங்களாக மூடப்பட்டிருந்த சிறுநீரக சத்திர சிகிச்சை நிலையம் திறக்கப்படும்

எம். செல்வராஜா   / 2019 செப்டெம்பர் 18 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி போதனா அரசினர் வைத்தியசாலையில், கடந்த இரண்டு மாதங்களாக மூடப்படடி்ருந்த சிறுநீரக சத்திர சிகிச்சை நிலையம், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் நேரடி தலையீட்டால் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் கவனத்துக்குக் கொண்டு வந்ததையடுத்து, இந்த சிறுநீரக சத்திர சிகிச்சைப் பிரிவில் டொக்டர்கள் பற்றாக்குறை இருப்பது தொடர்பாக தனக்குத் தெரியாது என்று, அமைச்சர் ராஜித கூறியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதையடுத்து, சுகாதார அமைச்சர், அமைச்சின் செயலாளர், சுகாதார பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் தொடர்புகொண்டு, பற்றாக்குறையாகவுள்ள டொக்டர்களின் வெற்றிடங்களை நிரப்புமாறு, உத்தரவிட்டுள்ளார்.

பதுளை அரசினர் வைத்தியசாலையில், சிறுநீரக சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளபட்டு வருகின்றன. சிறுநீரக இணைப்பு சத்திரசிகிச்சைகள், கொழும்பு, கண்டி, அநுராதபுரம் ஆகிய இடங்களில் இடம்பெறுகின்றன.

ஆகையால், பதுளையில் சிறுநீரக சிகிச்சைகள் பெற வருபவர்கள், மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சிறுநீரக இணைப்பு சத்திரசிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்கும் பதுளை நோயாளர்கள், கண்டி போதனா அரசினர் மருத்துவமனைக்கே செல்ல வேண்டியுள்ளது.

இந்நிலையில், கண்டி போதனா அரசினர் வைத்தியசாலையின் சிறுநீரக சத்திரசிகிச்சை நிலையம், கடந்த இரு மாதங்களாக மூடப்பட்டுள்ளது. சிறுநீரக இணைப்பு சத்திரசிகிச்சை நிலையத்தில் சேவையில் ஈடுபட ஆறு சத்திரசிகிச்சை நிபுணர்கள் தேவையிருந்த போதிலும், மூவர் மட்டுமேயிருப்பதால், சிறுநீரக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் அந்நிலையம் மூடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .