Freelancer / 2023 நவம்பர் 06 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
பலாங்கொடையில் வசித்து வரும் ராஜீவ்காந்தி மற்றும் ரொஷானி தம்பதிகளின் மகனான ஆரோன் சாத்விக் என்ற 2 வயது 11 மாதங்கள் ஆன சிறுவன் 100 மீட்டர் தூரத்தை 30 நொடிகளில் ஓடி முடித்து சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

பலாங்கொடை பெரிய மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் நடுவர்களாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, இரத்தினபுரி மாவட்டத் தலைவர் பிரவீனா பாரதி மற்றும் நுவரெலியா மாவட்டத் தலைவர் சாம்பசிவம் சதீஷ்குமார் போன்றோர் நிகழ்வைக் கண்காணித்து உறுதி செய்துள்ளனர்.
சோழன் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதேவேளை, அங்கிருந்த அனைவரும் அவரை வாழ்த்திப் பாராட்டியுள்ளனர்.
1 hours ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
28 Dec 2025
28 Dec 2025