2025 ஜூலை 19, சனிக்கிழமை

20 அடி பள்ளத்தில் பாய்ந்த வான்; 9 பேர் படுகாயம்

Freelancer   / 2022 ஜனவரி 31 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுந்தரலிங்கம்

டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் பயணித்த வான் ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 09 பேர் படுகாயமடைந்து கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இச்சம்பவம் ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் நேற்று (30) மாலை 6.45 மணியளவில் வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிய போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது 16 பேர் குறித்த வானில் பயணஞ் செய்துள்ளதாகவும், அதிக வேகத்தில் சென்ற வான் கட்டுப்பாட்டை மீறி தொழிற்சாலையில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியினை உடைத்துக்கொண்டு சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.

விபத்து காரணமாக சுமார் 30 நிமிடங்கள் வரை வீதி போக்குவரத்தும் தடைப்பட்டன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X