Editorial / 2024 ஒக்டோபர் 29 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி அதிவேகமாக பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதா ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை 2 மணியளவில் ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் செனன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பிரதான வீதியில் வட்டவளையில் இருந்து ஹட்டன் வரையில் காலை வேளையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதாகவும், காரின் சாரதி வீதியை சரியாக அவதானிக்காமையால், கார் வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கார் விபத்துக்குள்ளானதில் காரில் நான்கு பேர் பயணித்ததாகவும், விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
51 minute ago
58 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
58 minute ago
3 hours ago
05 Nov 2025