Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 மார்ச் 06 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதியொருவர் அந்த வீட்டின் எஜமானால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
60 வயது மதிக்கத்தக்க ஒருவரே அந்த யுவதியை கட்டிவைத்து மூன்று நாட்களாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.
அவரது பிடியில் இருந்து தப்பிவந்த யுவதி, மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் முறைப்பாடு செய்துள்ளார்.
நோர்வூட்டைச் சேர்ந்த தரகர் மூலமாக அந்த யுவதி, 20 நாட்களுக்கு முன்னரே அந்த வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அந்த நபர், அவ்வப்போது அந்த யுவதியிடம் அங்க சேஷ்டைகளை விட்டுவந்துள்ளார். இந்நிலையில், அவ்வீட்டைச் சேர்ந்த ஏனைய அங்கத்தவர்கள் விடுமுறையை கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டே, அந்த யுவதியை அச்சுறுத்தி, இவ்வாறு கட்டிவைத்து, துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது பிடியில் இருந்து தப்பி வீட்டைவிட்டு வெளியேறிய யுவதி, வீதியில் சென்றுக்கொண்டிருந்தவரிடம் பொலிஸ் நிலையத்தின் தகவலைப் பெற்று, பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டுள்ளார்.
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago