2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கண்டி மத்திய சந்தையில் நுகர்வோரை பாதுகாக்க விசேட ஏற்பாடு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மத்திய சந்தையில் பொருள்களை கொள்வனவு செய்யும் நுகர்வோரின் நன்மை கருதி கண்டி மாநகரசபை விற்பனை விலையை குறிக்கும் அறிவித்தல் பலகைகளை அறிமுகம் செய்துள்ளது.

கண்டி மத்திய சந்தையில் பொருள்கள் விற்பனை செய்யும்போது  பயன்படுத்தப்படும் விலைகளைச் சுட்டிக்காட்டும் அறிவித்தல்களில் ஏமாற்றுக்கள் பல இடம்பெறுவதாகக் கூறப்படுவது  தொடர்பாக  மாற்று வழியாகவே கண்டி மாநகரசபையின்  மத்திய சந்தை நிர்வாகம் இதனை முன்வைத்துள்ளது.

தமது நிறுவனத்தால்(மாநகர சபையால்) வழங்கப்படும் விலை அறிவித்தல் பலகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அப்படி அதைப் பயன்படுத்தாது வேறு வகையில் விலைகளைச் சுட்டிக்காட்டும் பலகைகளைப் பயன்படுத்தும் வர்த்தக நிலையங்களைப் பகிஷ்கரிக்கும்படியும்  அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நுகர்வோரை ஏமாற்றும் விதத்தில் அல்லது மோசடி செய்யும் விதத்தில் காட்சிப்படுத்தியதாகக் கருதப்படும் சில மாதிரி அறிவித்தல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக,  100 – 200 என்ற அறிவித்தலில் 100 கிராம் 200 ரூபாவா? அல்லது 100 ரூபாவிற்கு 200 கிராமா? என்பது தெளிவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X