Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.சுவர்ணஸ்ரீ)
கடந்த சில வாரங்களாக நுவரெலியா மாவட்டத்திற்கு வருகைத்தருகின்ற உல்லாச பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறை என்பதால் வாரயிறுதி நாட்களிலும் ஏனைய நாட்களிலும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நுவரெலியா மாவட்டத்தின் இயற்கை அழகைக் கண்டுகளிப்பதற்கு தமது குடும்பம் சகிதம் வருகைத் தருகின்றவர்களின்எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேவேளை, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகையும் இந்த மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. இவ்வாறு உல்லாச பயணிகளின் வரவு அதிகரித்துள்ளதால் நுவரெலியா நகரிலுள்ள விடுதிகள், ஹோட்டல்களின் வருமானமும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நுவரெலியாவுக்குச் செல்லும் உல்லாச பயணிகளில் நலன் கருதி ரயில்வே திணைக்களம் கொழும்பிலிருந்து நானுஓயாவுக்கு நகர்சேர் கடுகதி சேவை ஒன்றையும் இம்மாதம் 8ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளமைக்குறிப்பிடத்தக்கது.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் தொடர்ச்சியாக காணப்பட்டதால் நீர்வீழ்ச்சிகள் அழகாக காட்சியளிக்கின்றன.
நீர்த்தேக்கப்பகுதிகளை அண்டியப்பகுதிகளிலும் உள்ள இயற்கை அழகைக்கண்டுக்களிப்பதில் உல்லாச பயணிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago