2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பெரஹரா நடன கலைஞர்களுக்கு ஓய்வூதியம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மெஹொமட் ஆஸிக் )

கண்டி தலதா பெரஹராவில் பங்குபற்றும் கலைஞர்களுக்கு ஓய்வூதிய திட்டமொன்று இவ்வாண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு முதல் பெரஹரா ஊர்வலத்தில் ஈடுபடும் கண்டிய நடனக் கலைஞர்கள் உட்பட மற்றும் கலைஞர்களுக்கு இந்த ஓய்வூதிய முறை திட்டமிடப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்டுள்ள ஐவருக்கு எதிர்வரும் 26ஆம் திகதி கண்டியிலுள்ள  ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதியினால் ‘சரஸ்வதி’ காப்புறுதிப் பத்திரம் கையளிக்கப்படவுள்ளது. இதிலிருந்தே ஓய்வூதியப் பணம் கிடைக்கக்கூடியதாக இருக்கும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X