2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

ஊவா மாகாணத்தில் தாதியர் பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

ஊவா மாகாண வைத்தியசாலைகளில் இருநூறுக்கும் அதிகமான தாதியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றது.

இது தொடர்பில் மத்திய அரசாங்கத்திடம் கேட்டு கொண்டதற்கு அமைய 10 தாதியர்கள் நியமனம் மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஊவா மாகாண கிராமிய "ஆரம்ப" மற்றும் மாவட்ட வைத்தியசாலையகளில் நிலவும் தாதியர் வெற்றிடங்களினால் வைத்தியசாலை பணிகளை முன்கொண்டு செல்ல முடியாதுள்ளதாக ஊவா மாகாண சுகாதார அமைச்சர் யு.ஆ.புத்ததாச தெரிவிக்கின்றார்.

இந்நிலையில், மத்திய அரசாங்கத்திடம் மீண்டுமொரு முறை இது தொடர்பில் முன்கொண்டு செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X