Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எப்.எம். தாஹிர்)
ஹப்புத்தளை, கொஸ்லந்த பிரதேசத்தில் சிறுவர் காப்பகம் ஒன்றை நடத்தி வரும் ஜேர்மன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவரும் அதே நாட்டை சேர்ந்த இன்னுமொரு நபரும் யுவதிகள் மூவரும் கடந்த செவ்வாய்க்கிழமை பயணித்த வான் ஒன்றை மொனராகலை, சியம்பலாண்டுவ வீதி சோதனை சாவடியில் சோதனையில் ஈடுபட்டபோது, குறித்த ஜேர்மன் நாட்டவரிடம் ஹெரோயின் மில்லி கிராம் 1800 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனை அடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சியம்பலாண்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சியம்பலாண்டுவ பொலிஸார் நேற்று ஹப்புத்தளை கொஸ்லனாந்த பிரதேசத்திற்கு விரைந்து குறித்த சிறுவர் காப்பகத்தை சோதனையிட்டுள்ளனர். இதன்போது அங்கு பெறுமதி வாய்ந்த வெண்கலத்திலான புத்தர் சிலைகள், துப்பாக்கி ரவைகள், யானைத் தந்தம், கைத்துப்பாக்கி உறை ஆகியவற்றையும் அங்கிருந்து மீட்டுள்ளனர். இது தொடர்பில் அங்கு அதன் பொறுப்பாளராக இருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர், பொருட்கள் என்பன இன்று வியாழக்கிழமை பண்டாரவளை நீதிமன்றில் நிறுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விசாரணைகளை பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரணசிங்கவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்படுகிறது.
குறித்த வானில் வெளிநாட்டவர்களுடன் பயணித்த யுவதிகள் வயது 13, 17 மற்றும் 20 இற்கு உட்பட்டவர்கள் எனவும் இவர்கள் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
1 hours ago