2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கணவனால் தீ வைக்கப்பட்ட குடும்பப் பெண் மரணம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 09 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலப்பிட்டியில் கணவனால் தீ வைக்கபட்ட குடும்பப் பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணின் கணவனான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவரே உயிரிழந்தவராவார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X