2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

கூரை உடைந்ததால் ஒருவர் விழுந்து மரணம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுவர்ணஸ்ரீ)

கொட்டகலை ஸ்ரீமுத்துவிநாயகர் வருடாந்த உற்சவத்தின் தேர்ப் பவனியின்போது, வீதியின் குறுக்கேயிருந்த தொலைபேசிக் கம்பியை கூரையொன்றின் மீதேறி உயர்த்துவதற்கு எத்தனித்த நபரொருவர் கூரை உடைந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கொட்டகலை நகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ட்ரைட்டன் கே.ஓ.தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான 36 வயதுடைய நடராஜ் சுதாகர் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

தான் பணியாற்றிய வர்த்த நிலையமொன்றில் கூரை மீதேறியபோதே அவர் கீழே விழுந்தார்.

கூரை உடைந்து விழுந்ததில் தலையில் பலமான காயமேற்பட்ட நிலையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X