2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

இரத்தினபுரியில் இரு சடலங்கள் மீட்பு

Super User   / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நதீர் சரீப்தீன்)

கடந்த திங்கட்கிழமை இரத்தினபுரி நகரை அண்மித்த பிரதேசங்களில் இருந்து இரு ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் ஒரு சடலம் இரத்தினபுரி, களுகங்கை பகுதியில் மிதந்திருந்த போது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சடலம் 23 வயதான செல்டன் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் குறிப்பிட்ட சில நாட்களுக்கு முன்னர் நிவித்திக்கல பகுதியில் காணாமல் போனவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கிலீ மலே , இலுக்வத்த பகுதியின் நீரோடைக்கு அருகிலிருந்து இன்னொரு ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இரத்தினபுரி பொலிஸார் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X