Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
சர்வதேச அரங்கில் ஹிந்தி மொழி இன்று ஆங்கிலத்திற்கு ஈடாக பிரபல்யம் பெற்றுள்ளது. உலகலாவிய தொழிற்துறை நிறுவனங்களில் கடமையாற்றும் இந்தியர்களின் பங்களிப்பே இதற்கு காரணம் என கண்டி திருத்துவக் கல்லூரி மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெற்ற உலக ஹிந்தி மொழி தினவிழாவில் இந்திய உதவி உயர் ஸ்தானிகர் கே.எஸ்.மிஸ்ரா தெரிவித்தார். இவ்விழாவில் இந்திய உதவி உயர் ஸ்தானிகர் கே.எஸ் மிஸ்ரா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது
உலகில் ஆங்கில மொழிக்கு நிகராக ஹிந்தி மொழியும் பயன்படுத்தப்படுவதனால் இம்மொழிக்கு பெருமிதம் கிடைக்கின்றது. அதனால் இவ்வாறான விழாக்கள் கொண்டாடப்படுவதுடன் இந்தியாவின் மரபு ரீதியான பாரம்பரியமிக்க பல்வேறு கலை அம்சங்களையும் அது உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறினார். கண்டியில் இயங்கும் பாரதீய கலா கேந்திர கலாலய மாணவர்கள் வழங்கிய நடன மற்றும் கலை நிகழ்சிகளும் இங்கு இடம்பெற்றன.
1 hours ago
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
8 hours ago