Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கம்பளை நகரிலும் சுற்றுப் பகுதிகளிலும் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பாவனை என்பவற்றை கட்டுப்படுத்தும் வேலைத் திட்டமொன்றை கம்பளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
இதன் படி போதைப் பொருள் விற்பனை செய்வோர் தொடர்பான தகவல்களைத் தந்துதவுமாறு பொதுமக்களிடம் கோரும் சுவரொட்டிகள் கம்பளை நகரில் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் இன்று வியாழக்கிழமை கம்பளை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரொசான் பெர்னாண்டோ தலைமையிலான பொலிஸ் குழு கம்பளை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் பிரசுரங்களை விநியோகித்தமையையும் காணமுடிந்தது.
இது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிவிக்கும் பொருட்டு பிரத்தியேக தொலைபேசி இலக்கமொன்றும் கம்பளை பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த திங்கட்கிழமை கம்பளையில் சுற்றி வளைப்பொன்றை மேற்கொண்ட பொலிஸார் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண்னொருவரையும் மேலும் இரு நபர்களையும் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
7 hours ago
09 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago
09 Aug 2025