2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ஆலயங்களை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் முறையாக பதிய வேண்டும்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நுவரெலியா மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களை இந்து சமய கலாசார அலுவல்கள்  திணைக்களத்தில் முறையாக பதிவு செய்யப்படுகின்ற பட்சத்திலேயே இந்த ஆலயங்களின் பல்வேறு தேவைகளுக்கான நிதியினை பெற்றுக்கொள்ள முடியுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான இந்து ஆலயங்கள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் முறையாக பதிவு செய்யப்படாமலுள்ளன. இதன் காரணமாக பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீடுகளையும் அரச திணைக்களங்களின் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் முறையாக பதிவு செய்யப்படாமலுள்ள ஆலயங்கள் தொடர்பில் தனக்கு அறிவிக்கும் பட்சத்தில் அவற்றினை முறையாக பதிவு செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான உதயகுமார் மேலும்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X