2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

நீதிவானை அவமதித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

Super User   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                              ( எஸ்.சுவர்ணஸ்ரீ )

நீதிவானை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர், ஹட்டன் நகரில் மீன் விற்பனை செய்த வாகனமொன்றுக்கு அருகில் மோசமான வார்த்தைப் பிரயோகத்தினை மேற்கொண்டிருந்த போது, அவ்விடத்தில் நீதிவான் ஒருவர் இருப்பது குறித்து பொதுமகன்  ஒருவர் குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு அறிவித்தார்.

அதன் போது, குறித்த பொலிஸ்உத்தியோகஸ்தர் நீதிவானை அவமதிக்கும் வகையில் வார்த்தைப் பிரயோகத்தினை பிரயோகித்துள்ளார்.

இதுதொடர்பாக நீதிவான் பொலிஸ் உயர் அதிகாரிக்கு அறிவித்ததையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட நீதிவான் நுவரெலியா, வலப்பனை நீதிமன்ற நீதிவான் ஆவார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X