Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி கெட்டம்பே மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை கண்டி மாவட்ட 4 ஆவது கண்டி சாரணர் இயக்க தலைமையகம் ஒழுங்கு செய்த நான்காவது வருட கெம்போறி (கண்டி-ஜம்போரி) நிகழ்வு இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன கலந்து கொண்டார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்,
வாழ்வில் முக்கிய விடயம் மகிழ்ச்சியாக இருப்பது. தாம் மகிழ்ச்சியாக இருக்க பிறரையும் மகிழ்விக்க வேண்டும். பிறரை மகிழ்விக்க உயர்ந்த மன நிலை தேவை. அவ்வாறு வாழ்வோமாயின் வாழ்வில் எமக்கு எதுவித குறையுமிருக்காது.
மேற்படி கூற்றை சாரணர் இயக்கத்தின் தந்தை எனக் கூறப்படும் அதன் ஸ்தாபகர் பேர்ட்டன் பவுல் கூறியிருந்தார். இது சாரணர் இயக்கத்திற்கு மட்டுமல்லாது முழு மனித சமூகத்திற்கும் பொருந்துவாக உள்ளது என்றார்.
நாம் எமது கதையைக் குறைத்து செயற்பாட்டை அதிகரிக் கவேண்டும். அத்துடன் எமது செயற்பாடுகளை அகமகிழ்வுடன் மேற்கொள்ள வேண்டும். அதற்கு சாரணர் இயக்கம் போன்றவை உதவுவதாகக் கூறினார்.
யாழ்ப்பாணம் உட்பட வடக்கு, கிழக்கு பாடசாலைகளைச் சேர்ந்த சாரண மாணவ மாணவிகளும் இதில் கலந்து கொண்டனர்.
பிரதமர் கண்டி சாரணர் இயக்க இணையமொன்றையும் ஆரம்பித்து வைத்தார்.
1 hours ago
2 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
8 hours ago