Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் அம்பகமுவ பிரதேச சபையின் ஊடாக தோட்டப் பகுதிகளின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பெறப்பட்ட பொருட்களை உரியவர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வொன்று நாளை 7ஆம் திகதி காலை 10 மணிக்கு அம்பகமுவ பிரதேசசபையில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எம்.உதயகுமார் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் தோட்டத் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சாமிமலை ஒல்டன் கீழ்ப்பிரிவு , கிங்காரோ, மொக்கா மேற்பிரிவு, கியூ மேற்பிரிவு, பொய்ஸ்டன், மோறார் மேற்பிரிவு, செனன் தொழிற்சாலை பிரிவு, கொட்டியாக்கலை என் .சி, சென்என்ரூஸ் மேற்பிரிவு, பொகவந்தலாவை கீழ்ப்பிரிவு, வெஞ்சர் 50 ஏக்கர், பீரட், எடம்ஸ்பீக், போடைஸ், எல்பட கீழ்ப்பிரிவு, வட்டவளை லொனொக் ஆகிய தோட்டங்களின் பல்வேறு அபிவிருத்திக்கு மேற்படி பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து பெறப்பட்ட பொருட்கள் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
53 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
4 hours ago