2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வைத்தியசாலை ஊழியர் தீப்பற்றி மரணம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.எஸ்.குவால்தீன்)

கண்டி வைத்தியசாலை ஊழியர் ஒருவர் இன்று புதன்கிழமை காலை தீப்பிடித்து எரிந்து உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தொடர்பாக கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டி சுவஹம்பொல எனும் இடத்தைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

இவர் புகைபிடித்துக் கொண்டிருந்தபோது, அது தவறி உடையில் விழுந்ததால் ஏற்பட்ட தீயில் அவர் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வைத்தியசாலை நிர்வாகமும் விசாரணையொன்றினை மேற்கொண்டு வருகின்றது.

இறந்தவரின் பிரேத பரிசோதனை இன்று மாலை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X