2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பி.ரி.ஐ பக்ரீறியா விசிறும் வைபவம்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 07 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம்.ரம்ஸீன்)

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கம்பளை போத்தலப்பிடிய எனும் இடத்தில் இன்று காலை கியூபா பி.ரி.ஐ பக்ரீறியாவை  சூழலுக்கு விசிறும் தேசிய வைபவம் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக  சுகாதாரத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். மேலும் மத்திய மாகாணா ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மாகாண சுகாதார அமைச்சர் சுனில் அமரதுங்க, கம்பளை நகரபிதா சரத் காமினி ஹெட்டியாரச்சி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

கம்பளை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற  இவ்வைபவத்தில்  கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றுகையில்,

நாட்டில் டெங்கை கட்டுப்படுத்த கியூபாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பி.ரி.ஐ பக்ரீறியா மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பக்ரீறியா என்பவற்றை விசிர முடியும். பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைக்குமேயானால் சுற்றாடலை சுத்தமாக வைத்து டெங்கை முற்றாக கட்டுப்படுத்த முடியும்.

டெங்கு ஒழிப்பு முன்பு சுகாதாரத்துறைக்கு மட்டுமேயான பணியாக இருந்த போதிலும் இன்று சமூகத்தில் சகலரும் பங்களிப்புச் செய்ய வேண்டிய பணியாக மாறியுள்ளது. 1930 களில் ஏற்பட்ட மலேரியாவை ஒழிக்க எமக்கு  சுமார் 60 க்கும் மேற்பட்ட  ஆண்டுகள் சென்றன. ஆயினும்  டெங்கு ஒழிப்புக்கு அதிக ஆண்டுகளை செலவிட முடியாது" என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X