Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
தோட்டத் தொழிலாளர்களின் பாரம்பரிய உணவுப்பொருளான கோதுமை மாவின் விலையேற்றத்தினால் தோட்டத் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்துள்ளதால் எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஹட்டன், பொகவந்தலாவை, மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் கூறினார்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று மண்ணையும் புல்லையும் உண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்றைய அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ள மலையகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மக்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பேசுவதாக தெரியவில்லை.
தோட்டத் தொழிலாளர்களின் முக்கிய உணவான கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மாவுக்கான நிவாரணத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வராத அமைச்சர்கள் கோதுமை மாவுக்குப் பதிலாக அரிசி மாவினை உட்கொள்ளுமாறு உபதேசம் செய்து வருகின்றனர். இது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும்.
எனவே, எதிர்வரும் வரவு –செலவுத் திட்டத்தின் மூலமாவது தோட்டத் தொழிலாளர்களுக்குப் பொருளாதார ரீதியான நன்மைகள் கிடைக்கும் வகையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago