2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அம்பகமுவ பிரதேச சபையின் எதிரணி தலைவர் விளக்கமறியலில்

Super User   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ். சுவர்ணஸ்ரீ )

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் இராஜேந்திரன் ஹட்டன், நீதிவானின் உத்தரவுக்கேற்ப 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினரான இராஜேந்திரன் நோர்வூட் நகரில் சட்டவிரோதமாக கட்டிடமொன்றினை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நோர்வூட் பிரிவினர், ஹட்டன் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

அதைத் தொடர்ந்து நீதிமன்றின் உத்தரவுக்கேற்ப வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்;கள் நேற்று 14 ஆம் திகதி இந்த  கட்டிடத்தினை அகற்றுவதற்கு முற்பட்டபோது, குறிப்பிட்ட பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களுடன் கைக்கலப்பில் ஈடுபட்டதோடு பெக்கோ இயந்திரமொன்றுக்கும் சேதத்தினை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நோர்வூட் மற்றும் அட்டன் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு  வந்த பொலிஸார்
பிரதேச சபையின் உறுப்பினரையும் அவருடன் இருந்த மேலுமொருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸார் இவர்களை ஹட்டன் நீதிவானின் முன் ஆஜர் படுத்தினர்.

இதன் போது சந்தேக நபர்கள் இருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அம்பகமுவ பிரதேச சபையின் எதிரணி தலைவர் இராஜேந்திரன், ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர் என்பதுடன்; தொழிலாளர் சங்கத்தின் உபதலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .