2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கண்டியில் இரவுச் சந்தை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி நகரின் வரலாற்றில் முதன் முறையாக இரவுச் சந்தையொன்று நேற்று ஆரம்பிக்கப்பட்டது. கண்டி, கொட்டுகொடல்லை வீதியில் மாலை 6 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இச்சந்தை இரவு 12 மணி வரை நடத்துவதந்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கண்டி கொட்டுகொடெல்லை வீதியில் வாகன போக்குவருத்தை நிறுத்தி பாதை மத்தியில் தற்காலிக கடைகள் அமைத்து இச்சந்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தக நிலையங்களை தவிர பல வினோத நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நேற்று இரவு 9 மணியாகும் போது ஆயிரக்கணக்கான மக்கள் இரவுச் சந்தையில் பொருட்கள் கொள்வனவு செய்யவும் விநோத நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கவும் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .