2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மகாத்மாகாந்தியின் அகிம்சைப் போராட்டம், எமது மக்கள் உரிமைகளை பெற வழிவகுத்துள்ளது- வே.இராதாகிருஷ்ணன்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

1930ஆம் ஆண்டு மகாத்மாகாந்தி மேற்கொண்ட அகிம்சைப் போராட்டமானது, இன்று எமது மக்கள்  அகிம்சை வளியில் போராடி உரிமைகளை பெறுவதற்கு வழிவகுத்துள்ளதாக நுவரெலியா மாவட்டப் நாடாளுமன்ற அங்கத்தவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக கலை கலாசார சங்கம் அகிம்சா வழிப் பேராளியாக மகாத்மாகாந்தியின் நினைவுதினத்தை கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மகாத்மாகாந்தியின் வாழ்க்கை வரலாற்றில் இருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. அவர் 1930ஆம் ஆண்டு மேற்கொண்ட உப்புச் சத்தியாக்க்கிரகப் போராட்டம் அவரது வாழ்வில் முக்கிய திருப்பு முனையாக இருந்தது. 17 வருடங்களின் பின் 1947இல் இந்தியா சுதந்திரமடைய இவருடைய இந்த அகிம்சா வழிப் போராட்டம் பேருதவியாக இருந்தது. அது இன்று கூட எமது மக்கள் அகிம்சா வழியில் உரிமைகளைப் பெற வழிகாட்டியாக இருந்துள்ளது.

வடபகுதியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக எவ்வளவோ உயிர்கள் பலியாகின. எத்தனையோ ஜீவன்களது இரத்தம் சிந்தப்பட்டது. ஆனால், மகாத்மாகாந்தியோ ஒரு துளி இரத்தம் கூட சிந்தாது இந்தியாவிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தார்.

அவரது இலட்சியம் இந்தியன் என்பதாகும். என்ன இனம், மதத்தையுடையவரானாலும் என்ன மொழி பேசினாலும் அவன் இந்தியன் என்ற கோட்பாட்டை அவர் வலியுறுத்தி வந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .