2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பூண்டுலோயா, மஸ்கெலியா, பொகவந்தலாவை, கினிகத்தேனை பகுதிகளில் மில்கோ நிலையங்கள் திறப்பு

Kogilavani   / 2010 நவம்பர் 01 , மு.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அ.கனகசுந்தரம்)

பூண்டுலோயா,  மஸ்கெலியா,  பொகவந்தலாவை,  கினிகத்தேனை போன்ற பகுதிகளில் கால்நடை அபிவிருத்தி அமைச்சினால் மில்கோ விற்பனை நிலையங்கள் நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையங்கள் மூலம் தூய பசும்பால் , ஏனைய பால் உற்பத்தி பொருட்கள்,  இறைச்சி வகைகள் என்பன மலிவான விலையில் பெற்றுக்கொள்ள முடியும் எனகால்நடை அபிவிருத்தி மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி  அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தீபாவளியை முன்னிட்டு 05 தொன் கோழி இறைச்சி மில்கோ விற்பனை நிலையங்களுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதெனவும் அரசாங்க விலை நிர்ணயத்தின் படி 1 கிலோ கோழி இறைச்சியை 350 ரூபாவிற்கு வழங்குவதற்கு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதெனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை டிலி கூல்ட்றி தோட்டத்தில் பால் சேகரித்து குளிரூட்டி வைத்திருக்கும் நிலையத்தையும் அமைச்சர் திறந்துவைத்தார். இதன்மூலம் இரண்டு நாட்களுக்கு பால் சேகரித்து வைத்து பால் பௌசர்கள் மூலம் எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அங்கு அமைந்துள்ள பிரசாக்தி நிலையத்தில் ஊனமுற்ற 20 பேருக்கு சக்கர நாட்களிகள் ஆறுமுகன் தொண்டாமானால் வழங்கப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .