2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சுக்காக அரும்பணியாற்றியவர்களுக்கு கௌரவம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய மாகாண கைத்தொழில், விளையாட்டு, இளைஞர் சேவைகள் மற்றும் தமிழ் கல்வி அமைச்சின் கடந்த ஆறு வருட வெற்றிக்காக அரும் பணியாற்றிய அமைச்சின் ஊழியர்களை கௌரவிக்கும் விழா நேற்று வியாழக்கிழமை இரவு கண்டி ரியோ ஹோட்டலில் இடம்பெற்றது.

மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ, முதலமைச்சர் சரத் ஏக்கநாயக, மத்திய மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் அனூஷியா சிவராசா, விவசாய அமைச்சர் நிமல் பியதிஸ்ஸ ஆகியோர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்

இங்கு உரை நிகழ்த்திய மத்திய மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ... 'அரச ஊழியர்கள் தனக்கு உரிய வேலைகளை தவிர புதிதாக ஏதும் செய்தால் மட்டுமே அவர்களால் நாட்டுக்கு ஏதும் செய்ய முடியும்...' எனக் கூறினார். அனுஷியா சிவசாசா அமைச்சை பொறுப்பெடுத்ததுடன் அமைச்சில் புதுப் பொலிவு கானப்படுவதாகவும் கூறிய அவர், இதற்கு முன் அமைச்சர்களாக இருந்த வீ.ராதாகிருஷ்னன், எஸ்.அருள்சாமி ஆகியோர் அமைச்சின் முன்னேற்றத்துக்கு பெரும் பங்காற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக உரை நிகழ்த்தும் போதும்... 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையை சுபீட்சமான நாடாக ஆக்குவதற்கு முயற்சி எடுக்கும்போது மத்திய மாகாணமும் அதற்கு பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது...' என்று கூறினார்.

மத்திய மாகாண அமைச்சர் அனுஷியா சிவராசா தனது அமைச்சின் ஊழியர்கள் திறமைமிக்கவர்களாக இருப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாக உள்ளதாகவும் கூறினார்.

அமைச்சின் ஊழியர்கள் 60 பேருக்கு இங்கு விருது வழங்கப்பட்டதுடன் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X