2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நுவரெலியாவில் மீட்கப்பட்ட சிறுவன் மீண்டும் மாயம்: பொலிஸார் வலை வீச்சு

Super User   / 2011 ஜனவரி 01 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கடந்த 29 ஆம் திகதி முதல் காணாமல் போன 11 வயதான சிறுவன் நுவரெலியா நகரில் வைத்து நுவரெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டு சிறுவர் நன்னடத்தைப் பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டு சில மணி நேரத்தில் அங்கிருந்தும் தப்பிச்சென்றுள்ளதாக வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வட்டவளை கரோலினா ட்ரபர்ல்கார் தோட்டத்தை சேர்ந்த இந்த சிறுவன் கடந்த 29ஆம் திகதி முதல் வீட்டுக்கு திரும்பாத காரணத்தினால் இந்த சிறுவனின் பெற்றோர் வட்டவளை பொலிஸில் முறையிட்டனர்.

இந்நிலையில் நேற்று 31ஆம் திகதி நுவரெலியா நகரில் வைத்து நுவரெலியா பொலிஸார் மீட்டு நுவரெலியா சிறுவர் நன்னடத்தைப்பிரிவில் ஒப்படைத்துள்ளனர். எனினும் அங்கிருந்து அந்த சிறுவன் தப்பிச்சென்றுள்ளதாகல் இந்தச்சிறுவனை தேடும் பணியிளில் நுவரெலியா பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்தச்சிறுவன் இறுதியாக நீல நிற டிசேர்ட்டும் நீல நிற டெனிம் நீளகாற்சட்டடையும் அணிந்திருந்ததாக இந்தச்சிறுவனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். இந்தச்சிறுவன் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் வட்டவளை மற்றும் நுவரெலியா பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X