2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்க குழந்தைகளை கல்வியால் பலப்படுத்த வேண்டும்: அமைச்சர் கெஹெலிய

Super User   / 2011 ஜனவரி 02 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுப்பதற்காக இன்றைய குழந்தைகளை கல்வியால் பலப்படுத்த வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய றம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கட்டுகஸ்தோட்டை பௌத்த சபை மண்டபத்தில் இடம்பெற்ற வசதி குறைந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் உரை நிகழ்த்திய அமைச்சர் கெஹெலிய

உலகத்தின் பல நாடுகன் அன்று போன்றே இன்றும் எமக்கு அச்சுறுத்தல்களை விடுத்துக் கொண்டிருக்கின்றன.

இருந்தாலும் அவைகளுக்கு நாம் பலமாக முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அப்படி முகம் கொடுத்ததனாலேயே 30 வருட காலத்து யுத்தத்தை  வெற்றி கொண்டு சுதந்திர நாடு ஒன்றை உருவாக்க முடிந்தது..

2015ஆம் ஆண்டு எமது நாட்டை ஆசியாவில் சுபீட்சமான நாடாக மாற்றும் பொது அதற்கு பங்களிப்பை வழங்கும் பொருப்பு இன்றைய மாணவர்களுக்கும் உண்டு.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X