2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இறக்குமதியாகும் கோழி இறைச்சி, முட்டைகளில் கிருமிகள் இல்லை: பரிசோதனையில் நிரூபணம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 07 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்

இந்தியாவிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளில் நோய்களை பரப்புவதற்கான  வைரஸ்களோ அல்லது வேறு கிருமிகளோ  இல்லையென்பதை பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கால்நடைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் எச்.ஆர். மித்திரபால தெரிவித்தார்.

பேராதனையில் நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற கலந்துரையாடயொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் கோழிகளுக்கும் முட்டைகளுக்கும் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக  அவை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. ஆனாலும், அவை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு முன்னராக பரிசோதனைகள் மூலம் நோய்களை பரப்பும் கிருமிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  எனவே அரசியல் இலாபம் கருதி எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளும் பிரசாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X