Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 1999 நவம்பர் 30 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
"அரசாங்கம் கூறுவது போல் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தண்டனை வழங்க முடியாது.
நான் பிரதமராக இருந்த போது ரோம் ஒப்பந்தத்தில் கையொழுத்திடாததால் அவற்றை செய்ய முடியாது நான் இந்த அரசாங்கத்தை பாதுகாத்துள்ளேன்" என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கண்டி, கட்டுகஸ்தோட்டை நகரில் இன்று சனிக்கிழமை கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தலமையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"இந்த அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது மக்களை சித்திரவதை செய்கின்றது. இன்று மக்களுக்கு வாழ முடியாதளவு எரிபொருளின் விலையை அரசாங்கம அதிகரித்துள்ளது. இதனால் பஸ் கட்டனம், மின் கட்டனம் பாணின் விலை உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளை அதிகரித்து மக்களை சித்திரவதை செய்கின்றது.
ஜெனீவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் பிரேரணைக்கு எதிராக மக்களை வீதிக்கு இரங்குமாறு அரசாங்கம் கூறுகின்றது. நாங்கள் வீதிக்கு இறங்குவதால் எவ்வித பயனும் இல்லை.
நாங்கள் அரசாங்கத்திற்கு கூறுவது என்னவென்றால் உடன் அரச ஊழியர்களது வேதனத்தை அதிகரித்து மக்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்றே. நாளை அரசாங்கம் அதனை செய்யுமானால் நாங்களும் அரசாங்த்துடன் சேர்ந்து வீதிகளுக்கு இறங்குவோம். இல்லாவிட்டால் மக்களுக்கு உதவிகளை பெற்று கொடுப்பதற்காக நாங்கள் வீதிக்கு இறங்குவோம்" என்றார்.
இங்கு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க,
"அரசாங்கம் தற்போது பொதுமக்களை பற்றி சிந்திப்பதே இல்லை. ஜெனீவாவில் நடைபெருகின்ற கூட்டத்தொரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்காக 50 பேர் கொண்ட குழுவொன்று சென்றுள்ளது. அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையிள் எவ்வித அதிகாரமும் இல்லை. இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.
32 minute ago
43 minute ago
52 minute ago
Anushfair Sunday, 26 February 2012 03:58 AM
இப்படி சொல்லிக்கொண்டே காலத்தை கடத்துங்கள். உங்களுக்கு இவ்வளவுதான் முடியும்.
Reply : 0 0
jeyarajah Sunday, 26 February 2012 12:44 PM
ரணில் ஐயா அவர்களுக்கு மகிந்தவோ அல்லது தனது இன வேறு தலைவர்களோ இவ்வாறான சிக்கல்களில் மாட்டுப்படுவார்கள் என்பது முன்னரே தெரிந்தது, அவர் அவரின் இனத்தைப் பற்றி வைத்திருந்த கணிப்பையே காட்டி நிற்கின்றது. ரோம் ஒப்பந்தத்தில் நீங்கள் கைச்சாத்திடாத உண்மை காரணம் என்னதான் ஐயா.
Reply : 0 0
thivaan Wednesday, 29 February 2012 02:07 AM
irak , libiya , sudaan , uganda , syrliano.
இந்தநாடுகள் ரோம் ஒப்பந்தத்தில் கைஎழுத்து இடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago
52 minute ago