2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஒஹிய சுரங்கத்துக்குள் தடம்புரண்ட 'உடரட்ட மெனிக்கே'

Menaka Mookandi   / 2013 ஜனவரி 03 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுவர்ணஸ்ரீ)

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த 'உடரட்ட மெனிக்கே' ரயில், ஒஹிய பிரதேசத்தில் அமைந்துள்ள ரயில் சுரங்கப் பாதைக்குள் வைத்து தடம்புரண்டுள்ளது.

இச்சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அம்பேவல மற்றும் இகல்கஸ்ஸின்ன ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் மேற்படி சுரங்க ரயில் பாதை அமைந்துள்ளது.

இதனூடாக பயணித்துக்கொண்டிருந்த மேற்படி ரயிலின் எஞ்சினுடன் மற்றுமொரு ரயில் பெட்டி இதன்போது தடம்புரண்டுள்ளது. இந்த சம்பவத்தால் மலையகத்துக்கான ரயில் சேவை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X