2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வட்டவளையில் பள்ளத்தில் விழுந்து ரிப்பர் வாகனம் விபத்து

Menaka Mookandi   / 2013 ஜனவரி 03 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.சுவர்ணஸ்ரீ)


வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டவளை டி கார்டன் வளைவுக்கு அருகில் ரிப்பர் வாகனமொன்று இன்று மாலை 4.30 மணியளவில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. கினிகத்தேனை – ஹட்டன் பிரதான பாதையில் வட்டவளை டி கார்டன் விடுதிக்கு அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வட்டவளை தோட்டத்திலிருந்து நுவரெலியாவுக்கு மாட்டுச் சாணம் ஏற்றி வந்த இந்த ரிப்பர் வாகனம் குறுக்குப் பாதை ஒன்றிலிருந்து கினிகத்தேனை – ஹட்டன் பிரதான பாதைக்கு திருப்ப முற்பட்ட போது குறிப்பிட்ட வாகனம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பின்நோக்கி இழுபட்டு வந்து பள்ளத்தில் சரிந்துள்ளது.

இந்த சம்பவத்தில் வாகன சாரதியும் நடத்துநரும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர். விபத்தின் போது எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இது தொடர்பாக வட்டவளை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X