2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இலவச மருத்துவ முகாம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 05 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.தியாகு)


கொழும்ப மிலேனியம் சிட்டி லயன்ஸ் கழகம், லியோ கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நுவரெலியா சென்.ஜோன்ஸ் தோட்டத்தில் இலவச மருத்தவ முகாம் இன்று நடைபெற்றது.

இம்மருத்துவ முகாமில் கண்பார்வை பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கான மூக்குக் கண்ணாடியும், கர்ப்பினத் தாய்மார்களுக்கான போசாக்கு நிறைந்த உணவு வகைகளும், சிறுவர்களுக்கான கல்வி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட வைத்திய சாலையின் வைத்தியர்களினதும் தாதியர்களினதும்  உதவியுடன் வெளிநோயாளர் பிரிவும் ஏற்படுத்தப்பட்டு இதன்போது ஆண்களுக்கு ஏற்படும் வாய்ப் புற்றுநோய் தெர்க்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது. இதன்போது ஜக்கிய இராஜ்சிய பல்கழைக்கழகத்தின் மாணவர்களும் கலந்து கொண்டணர்.

இம்மருத்துவ முகாமுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை புருக்ரேஞ் தோட்ட இயக்குனர் நிரஞ்ஞன் விக்கிரமசிங்க மற்றும் தோட்ட சேவையாளர் சங்கத்தின் உப தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் மெற்கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X