2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கிணற்றுக்கு அருகில் விழுந்தவர் சடலமாக மீட்பு : வட்டகொடையில் சம்பவம்

Kanagaraj   / 2013 ஜனவரி 06 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

தனது வீட்டுத் தோட்ட கிணற்றுக்கு அருகில் உடுதுணிகளைக் கழுவிக் கொண்டிருந்த நபரொருவர் திடீரென கிணற்றுக்கு அருகில்  விழுந்து மரணமான சம்பவமொன்று மெதகும்புர மத்தியப்பிரிவு தோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றுள்ளது. இந்தச்சம்பவத்தில் 49 வயதான பொன்னையா நடராஜ் என்பவரே உயிரிழந்தவாராவார்.

குறிப்பிட்ட நபர் இன்று காலை தனது தோட்டத்துக்கு அருகிலுள்ள கிணற்றுக்குச் சென்றுள்ளார். குறித்த நபர்  நீண்ட நேரமாக வீடு திரும்பாத காரணத்தினால் வீட்டார் அவரைத் தேடி சென்ற போது கிணற்றில் பாதி உடல் தெரியும் வகையில் அவர் விழுந்து கிடந்துள்ளார்.

உயிரிழந்த நிலையில் கிடந்த அவரை தோட்ட மக்கள் மடக்கும்புர வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.அதன் பின்பு பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்தச்சம்பவம் தொடர்பாக தலவாக்கலை மற்றும் வட்டகொடை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X