2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கண்டி போகம்பரையில் சுதந்திரத்தின விழா

Kanagaraj   / 2013 ஜனவரி 07 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினத்தை கண்டி போகம்பரை மைதானத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சிறப்பாகக் கொண்டாடுவதற்கு கண்டி மாவட்ட அரசாங்க அதிபர் காமினி செனவிரட்ன தலைமையிலான குழு இன்று மாலை தீர்மானித்துள்ளது.

சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுக்கூட்டம் இன்று மாலை கண்டி செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் மத்திய பிராந்தியத்திற்குப் பொறுப்பான கட்டளை அதிகாரிகள் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

சுதந்திர தின வைபவத்தில் பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் சுமார் 8000 பாடசாலை மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதைகளும் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை இலங்கையின் 65 ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் பொருட்டு 65 தேசிய கொடிகளை ஏந்திய மாணவர்களின் விசேட அணிவகுப்பும் இடம்பெறுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X