2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஹட்டனில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 09 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.கமலி


ஹட்டன் நகரிலுள்ள பலசரக்குக் கடைகள் சிலவற்றிலிருந்து பாவனைக்குதவாத பழப்புளி, முட்டைகள், வெங்காயம், வெள்ளைப்பூடு ஆகியன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஹட்டன் நகரில் பழுதடைந்த உருளைக்கிழங்கு கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்நகரிலுள்ள மொத்த மற்றும் சில்லறை பலசரக்குக் கடைகளில்  பொதுச் சுகாதார பிரசோதகர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இச்சோதனையின்போது பாவனைக்குதவாத 150 கிலோகிராம் பழப்புளி கண்டுப்பிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் 750 முட்டைகள், 150 கிலோகிராம் வெங்காயம், 50 கிலோகிராம் வெள்ளைப்பூடு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளதாக ஹட்டன், டிக்கோயா நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

இதேவேளை, லேபல் இல்லாது பொருட்களை பொதியிட்டு விற்பனை செய்த விற்பனை நிலையமொன்றும் இச்சோதனை  நடவடிக்கையின்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்பொருள் அங்காடியொன்றில் இயங்காத குளிர்சாதனப் பெட்டியில் ஐஸ்கிறீமை வைத்து விற்பனை  செய்யப்பட்டதையும் கண்டுபிடித்தாகவும் அவர் கூறினார்.

இவர்களுக்கு எதிராக நாளைமறுதினம்; வெள்ளிக்கிழமை ஹட்டன் நீதவான் நீதமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் தற்போது ஹட்டன் டிக்கோயா நகரசபையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன.

இச்சோதனை நடவடிக்கையை ஹட்டன், டிக்கோயா நகரசபையின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கினிகத்தேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் இணைந்து மேற்கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X