2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பதுளையில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 11 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.தாஹிர்

பதுளை மாவட்டத்தில் இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பதுளையில் தொடர்ச்சியாக அடை மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் பதுளை நகரை அண்டிய ஜினாநந்தகம, அந்தனிய, சுமண திஸ்ஸகம உள்ளிட்ட பதுளுஓயாவை அண்டிய கிராமங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பதுளை, அந்தனிய பிரதேசத்தினூடாக பதுளுஓயாவை கடக்க முற்பட்டபோது ஒருவர் நேற்று வியாழக்கிழமை இரவு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதாகவும் இவரது சடலம் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

65 வயதான பி.எம்.டிங்கிரிபண்டா என்பவரே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டவராவர்.

இதேவேளை, மற்றையவர் பசறை, கமயவெல வலாத்தொட  பாலத்தைக் கடக்க முற்பட்டபோது நேற்று வியாழக்கிழமை இரவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இவரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பசறை பொலிஸார் கூறினர்.

52 வயதான எஸ்.எம்.பியரத் என்பவரே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X