2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

திவிநெகும திட்டம் தொடர்பான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 18 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


அக்குறணை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் திவிநெகும (வாழ்க்கை எழுச்சி) திட்டம் தொடர்பான கருத்தரங்கொன்று அக்குறணை மர்ஹபா வரவேற்பு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்கு மத்திய மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி பாரூக் உரையாற்றுகையில்,
 
'யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுபோன்று நாட்டின் வறுமையையும் முடிவுக்கு கொண்டு வருவதே அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் நோக்கமாகும்.

எமது நாட்டில்  வறுமையை ஒழிப்பதற்கு பல அரசாங்கங்கள் பல முயற்சிகளை செய்தன. ஆரம்பத்தில் இலவசமாக அரிசி வழங்கப்பட்டன. அதன பின் உணவு முத்திரை வழங்கப்பட்டன. பின்னர் ஜனசவிய, சமுர்த்தி திட்டம் ஆகியன மேற்கொள்ளப்பட்டன.  இருந்தபோதும் இன்னும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றவர்கள் குறைந்ததாக தெரியவில்லை. எனவே தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திவிநெகும திட்டத்தை ஆரம்பித்தார்.

இதற்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களிலுல்ல குறைபாடுகளை நிவர்த்தி செய்து திவிநெகும திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. உணவு தேவைப்படுபவர்களுக்கு ஒரு வேளை உணவை வழங்கும் முறைக்கு மாறாக உணவை பெற்றுக்கொள்ளும் விதத்தை கற்றுக்கொடுப்பதே திவிநெகும திட்டத்தின் நோக்கம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X