2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

காட்டிக்கொடுத்தால் போராட்டம்: திகாம்பரம் எச்சரிக்கை

Kanagaraj   / 1999 நவம்பர் 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்த சம்பளவுயர்வு விவகாரத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இம்முறையும் தொழிலாளர்களை காட்டிக்கொடுத்தால் போராட்டம் வெடிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

மலையக தொழிற்சங்க கூட்டமைப்பின்' அங்குரார்ப்பணத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வெள்ளவத்தையிலுள்ள குளோபல் டவர் ஹோட்டலில் நேற்று  நடைபெற்றது. அங்கு கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் கடந்த முறை கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்தில் நாம் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். அழுத்தங்களை கொடுத்தோம். அதனால் தான் தொழிலாளர்களுக்கு ஒரு சிறு தொகை சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொள்ள முடிந்தது.

நாம் இந்த நடவடிக்கையினை முன்னெடுத்திருக்காவிடின் தொழிலாளர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டிருப்பார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலமாக தொழிலாளர்கள் இம்முறையும் காட்டிக்கொடுக்கப்பட்டால் நாம் எதற்கும் அஞ்ச மாட்டோம் போராட்டம் வெடிக்கும்.

ஆகையால்,தொழிலாளர்களை ஏமாற்றாமல் வாழ்வதற்கு ஏற்றவகையில் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும் என்றார்.

  Comments - 0

  • prem Tuesday, 19 February 2013 09:15 AM

    இவர் சொல்லை நம்பலமா?

    Reply : 0       0

    guru Tuesday, 19 February 2013 12:23 PM

    முதலில் இவருக்கு எதிராக யாரும் போராட்டம் செய்யாமல் இருந்தால் நல்லது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X