2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹந்தானையில் நிர்க்கதியான பல்கலை மாணவர்கள் நால்வர் மீட்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி,ஹந்தானையில் நிர்க்கதியான பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரை நாம் மீட்டுள்ளதாகவும் அவர்களில் மாணவி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்தே இவர்களை நேற்று மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நால்வரில் இருவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவர்கள் என்றும் ஏனைய இருவரும் தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.

இவர்கள் நால்வரும் ஹந்தானை மலைக்கு நேற்றுக்காலை ஏறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாங்கள் நிர்க்கதியாகிவிட்டதாக கையடக்க தொலைப்பேசியூடாக வழங்கிய தகவல்களை அடுத்தே அந்த மாணவர்கள் நால்வரையும் தாம் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .