2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹெரோயின் வைத்திருந்த எழுவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும் 7 பேர் கட்டுகஸ்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி பகுதியில் நேற்று சனிக்கிழமை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் விசேட தேடுதலை மேற்கொண்டனர். இதன்போது ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

30 வயதிற்கு குறைந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொருவரும் போதைப்பொருளுக்காக நாளொன்றுக்கு குறைந்தது 4,000 ரூபா வரை செலவளிப்பதாகவும் இவர்கள்  பணத்திற்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .