2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை மாவட்ட நீதிபதியின் தடை உத்தரவினை மீறியும் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இலவச கல்வியை அழிப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியொன்றை சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மாணவ குழுக்களிடையே மோதல் ஏற்படலாம் எனவும் இதன் காரணமாக பொதுமக்களுக்கு அசௌகரியம் எற்படும் என தெரிவித்து பலாங்கொடை பொலிஸார் நீதிமன்றில் ஆர்ப்பாட்டத்திற்கான தடை உத்தரவினை கோரியிருந்தனர்.

இதனை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு பலாங்கொடை மாவட்ட நீதிமன்றம் தடை விதித்தது.

இதனால் கொழும்பு - பதுளை பிரதான வீதியிலும் பல்கலைக்கழகத்துக்கு வெளியேயும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் நீதிமன்ற கட்டளையை புறக்கணித்த மாணவர்கள்,  தமது ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .