2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் பலி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிருஷாந்தன்


பஸ்ஸிலிருந்து விழுந்த பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவமொன்று கொட்டகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸிலிருந்தே குறித்த பெண் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பஸ் ஹட்டனில் இருந்து டயகம நோக்கிச் பயணித்துள்ளது. சம்பவத்தில் கொட்டகலை டெனிகிளையர் தோட்டத்தைச்சேர்ந்த 57 வயதான ஆறுமுகம் தனலட்சுமி என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .